தாயைப் பற்றி தவறாக பேசிய பெண்ணை கண்மூடித்தனமாக அடித்த ஊழியர்: கமெராவில் சிக்கிய காட்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் தாயைப் பற்றி பெண் வாடிக்கையாளர் ஒருவர் தவறாக பேசியதால், ஊழியர் அவரை கண்மூடித்தனமாக அடிக்கும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் பிரதான சாலையில் இருக்கும் மெக்டொனால்டு கடைக்கு கடந்த 28-ஆம் திகதி வந்த பெண், அங்கிருக்கும் ஊழியரிடம் ப்ரீ சோடா வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அப்போது ஊழியர் பீர் சோடா இல்லை என்று கூறி உடனடியாக அங்கிருக்கும் சோடா இயந்திரத்தை வேகமாக மூடியுள்ளார்.

இதனால் சற்று கோபமடைந்த அந்த பெண் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் சென்று கொண்டிருக்கும் போதே, வாடிக்கையாளர் பெண் ஊழியரின் தாயைப் பற்றி தவறாக பேசியுள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஊழியர், அந்த பெண்ணை சரமாரியாக அடித்துள்ளார், அதன்பின் அங்கு இருந்த வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்கள் தடுத்துள்ளனர்.

இருப்பினும் இதுதொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்