ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: அமெரிக்க ஜனாதிபதி

Report Print Fathima Fathima in அமெரிக்கா

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் கூறுகையில், இரு தரப்பு பேச்சுவார்த்தையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

ஈரான் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன், ஆனால் அவர்கள் தயாரா என எனக்கு தெரியவில்லை.

பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கருத்தை உருவாக்க முடியுமென்றால் அதை முயற்சித்து பார்ப்பதில் தவறில்லை.

ஆனால் இதற்காக எந்தவொரு முன் நிபந்தனையும் விதிக்க மாட்டேன், இந்த சந்திப்பால் இரு நாடுகளுக்கு மட்டுமின்றி உலகுக்கே நன்மை பயக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்