நான் லேட்டாக செல்லவில்லை, பிரித்தானியா ராணிதான் லேட்டாக வந்தார்: சீறும் டிரம்ப்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

ஜூலை மாதம் பிரித்தானிய ராணியை சந்திக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றிருந்த நிலையில் அவர் ராணியைக் காக்க வைத்ததாக செய்திகள் வெளியான நிலையில் அந்த செய்திகளை கடுமையாக மறுத்துள்ளார் டிரம்ப்.

பெனிசில்வேனியாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றிய டிரம்ப், தான் பிரித்தானிய ராணியைக் காண தாமதமாக சென்றதாக வெளியான செய்திகள் தவறு என்றும், உண்மையில், பிரித்தானிய மகாராணியைச் சந்திப்பதற்காக தான் 15 நிமிடங்கள் முன்னதாகவே சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் ஒரு நாட்டின் மகாராணி அல்லவா? அவருக்காக காத்திருப்பதில் தவறொன்றுமில்லை என்றும் டிரம்ப் கூறினார்.

அதுமட்டுமின்றி ராணியுடன் தேநீர் அருந்த சென்றபோது தான் நீண்ட நேரம் தங்கி விட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதாக கூறிய டிரம்ப், நமக்கு பிடித்தவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாது இல்லையா, ராணி மிகவும் அருமையானவர், மட்டுமின்றி அவரும் எனது மனைவியும் ஒருவரையொருவர் பிடித்துப்போய் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள், இது தவறா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஊடகங்களை கடுமையாக சாடிய அவர், போலி, அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் போலி என்று கடுமையாக விமர்சித்தார்.

அதே நேரத்தில், மக்கள் பிரிட்டன், கிரேட் பிரிட்டன், இங்கிலாந்து என பல பெயர்களில் அழைக்கிறார்கள், எப்படி அழைக்கப்பட்டாலும் நல்ல மரியாதை கொடுக்கும் நாடு அது என்று புகழவும் டிரம்ப் தவறவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்