வீட்டில் ஒளித்து வைக்கப்பட்ட 7 வயது சிறுவனின் சடலம்: 16 வயது சிறுமியின் திடுக்கிடும் செயல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 7 வயது சிறுவனின் சடலம் வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பாக 16 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Colorado மாகாணத்தை சேர்ந்த ஜோர்டன் வாங் (7) என்ற சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் தங்கள் விசாரணை தொடங்கினார்கள்.

ஜோர்டனின் குடும்பத்துக்கு சொந்தமான வேறு வீட்டில் பொலிசார் சென்று சோதனை செய்த போது அங்கு சிறுவனின் சடலம் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுப்பிடித்துள்ளனர்.

இவ்வழக்கு சம்மந்தமாக 16 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜோர்டனுக்கு கைது செய்யப்பட்ட சிறுமி என்ன உறவுமுறை என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.

மேலும் இந்த கொலை சம்மந்தமான விபரங்களையும் பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.

ஆனால் ஜோர்டன் கடத்தி செல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...