20 மீற்றர் உயர பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளப்பட்ட இளம்பெண்: திடுக் வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா
119Shares
119Shares
ibctamil.com

அமெரிக்காவில் Washington பகுதியில் 20 மீற்றர் உயர பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளப்பட்ட இளம்பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் குணமாக நீண்ட காலமாகும் என தெரியவந்துள்ளது.

Jordan Holgerson (16) தனது நண்பர்களுடன் லூயிஸ் ஆற்றின் மேலுள்ள பாலத்தில் தனது தோழிகளுடன் நின்று கொண்டிருந்தபோது திடீரென அவரது தோழிகளில் ஒருத்தி அவளைப் பிடித்துத் தள்ளிவிட்ட திடுக்கிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

விலா எலும்புகள் முறிந்து, நுரையீரலில் காயம்பட்டு, உடல் முழுவதும் காயங்களுடன் Jordan Holgerson மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடியோவை காண

எதிர்பாராமல் கீழே தள்ளப்பட்ட தான் பாதி வழியில் மயக்கமடைந்ததாகவும், தண்ணீரில் மோதும்போது மீண்டும் தனக்கு நினைவு வந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார் Jordan Holgerson.

வீடியோவைப் பார்த்தவர்களில் ஒருவர், இது தவறு, ஒருவர் தானாக குதிப்பதற்கும் எதிர்பாராதபோது இன்னொருவர் தள்ளி விடுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்கிறார்.

இன்னொருவர், தள்ளி விட்ட பெண் மீது கொலை முயற்சி வழக்கு தொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் Jordan Holgersonஐத் தள்ளி விட்ட பெண் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்