கறுப்பர் என கூறியதால் ஆத்திரமடைந்து இளம்பெண் செய்த காரியம்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் 'கறுப்பர்' என கூறியதால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர், வெள்ளை இன பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, இளம்பெண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட தரையில் விழுந்து கிடந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பொலிஸார், காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இளைஞர் ஒருவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, மெட்ரோ ரயில் நிலையத்தில் அசம்பாவிதம் நடந்ததற்கு என்ன காரணம் என்பதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், இரண்டு இளம்பெண்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்பொழுது ரயிலில் இருந்து இறங்க முற்படும் வெள்ளை இன பெண், எதிரில் இருந்த பெண்ணை நோக்கி 'கறுப்பர்' என கூறுவதோடு முதல் வீடியோ நிறைவடைகிறது.

அதற்கு அடுத்த வீடியோவில், ரயில் நகரும்பொழுது, கறுப்பர் என கூறிய அந்த வெள்ளை இன பெண் ரத்த காயங்களுடன் தரையில் கிடப்பதை போல அந்த வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்