நாயை காப்பாற்ற போய் உயிரை விட்ட பெண்! கடித்துக் கொன்ற முதலை

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் நடைபயிற்சி சென்ற பெண்ணை, முதலை ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹில்டன் ஹெட் தீவை சேர்ந்தவர் கசாண்ட்ரா கிலின்(45). இவர் அங்குள்ள கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது கடற்கரை ஓரமாக படுத்திருந்த 8 அடி நீள முதலை ஒன்று, கசாண்ட்ராவின் நாயை கவ்விப் பிடித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கசாண்ட்ரா தனது நாயை காப்பாற்ற முயன்றார். அச்சமயம் அந்த முதலை உடனே நாயை விட்டுவிட்டு கசாண்ட்ராவின் காலை இறுக்கமாக கவ்விக் கொண்டது.

பின்னர், அவரை வேகமாக கடலுக்குள் இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெற்கு கலிபோர்னியாவில் கடந்த 30 ஆண்டுகளில் முதலை தாக்கி மரணமடைந்த முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers