பில்கேட்ஸை விட கேரளமக்களுக்கு அதிகமாக அள்ளிக் கொடுக்கும் ஆப்பிள்! எத்தனை கோடி தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமெரிக்காவின் பிரபல தொழில் நுட்ப நிறுவனமான ஆப்பிள் 7 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் சீரமைப்பு நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து நிதிகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகைகள் ஆப்பிள் நிறுவனம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7 கோடி ரூபாய் வழங்குவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவுவதற்கு தன்னுடைய App Store மற்றும் iTunes Store-ல் Mercy Corps மூலமும் மக்கள் உதவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் மக்கள் தங்களால் முடிந்த $5, $10, $25, $50, $100, அல்லது $200 வரை கிரிடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி உதவலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட பேரிடரைக் கண்டு எங்கள் மனம் கலங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும், மறு சீரமைப்புக்கு உதவவும் மெர்சி கார்ப்ஸ் அமைப்பு மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் சேர்த்து 7 கோடி ரூபாய் வழங்க இருக்கிறோம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பெரு வெள்ளம் காரணமாக 417 பேர் தங்கள் சொந்த வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பவே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அளவிற்கு இந்த வெள்ளத்தின் தாக்கம் உள்ளது.

மேலும் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரும், உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் 4¼ கோடி ரூபாய் நிதியாக வழங்கியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்