அமெரிக்காவில் நடந்த கொலைவெறி தாக்குதல்! வெளியான உண்மை தகவல்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட போது, நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு வளாகம் ஒன்றில், வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்பட்டன.

அப்போது விளையாட்டில் தோல்வியடைந்த டேவிட் கேட்ஸ்(24) என்ற இளைஞர், ஆத்திரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதனால் மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடியுள்ளனர்.

அப்போது இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்திய கேட்ஸ், தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். அவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சிதறி ஓடிய மக்களை அமைதிபடுத்தி வேறு யாரேனும் துப்பாகிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் உள்ளார்களா என சோதனையிட்டனர்.

Joey Roulette/Reuters

மேலும், தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், டேய்லர் பாய்டெக்ஸ்டெர் என்ற பெண் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் அவரை பார்த்தோம். இரண்டு கைகளால் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு சுற்றி வந்தார். நான் என் வாழ்க்கை குறித்தும், எனது நண்பர்கள் வாழ்க்கை குறித்தும் மிகவும் அச்சமடைந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

வீடியோ விளையாட்டில் பங்குபெற்ற ட்ரினி ஜோகா(19) எனும் இளைஞர், இச்சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘என்னைப் பொறுத்தவரை நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. எனது கட்டை விரலை குண்டு தொட்டுச் சென்றது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ஜேக்சன்வில்லி நகரின் மேயர் லென்னி கர்ரி கூறுகையில், ‘பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கடினமாக உழைக்க வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போட்டியை ஒருங்கிணைந்த இந்த வீடியோ விளையாட்டு போட்டியின் உரிமை நிறுவனமான EA Sports, அதிகாரிகளுடன் இணைந்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

WJXT/AFP

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments