சிறுவர்களைக் கொல்வதை கண்ணால் பார்த்தோம்: நெஞ்சை பதறச் செய்யும் பெண்ணின் சாட்சியம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் பல ஆண்டுகளாக நிகழ்ந்த சித்திரவதைகள் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், பெரும்பாலான குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன என்றாலும், தற்போது பல ஆண்டுகளுக்குப் பின் குற்றசாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

Burlingtonஇலுள்ள St. Joseph's Orphanage என்னும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்த பலர் தங்கள் கசப்பான, பயத்தை ஏற்படுத்தும், தாங்கள் மறக்க விரும்பும் நிகழ்வுகளை சாட்சியமாக கூறியுள்ளனர்.

அவர்களில் Sally Dale என்பவரின் சாட்சியம் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. தனது 2ஆவது வயதிலிருந்து 23ஆவது வயது வரை அந்த காப்பகத்தில் வாழ்ந்த Dale அங்கு குழந்தைகள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகிக்கப்பட்டது முதல் சிறுவன் ஒருவன் ஜன்னல் வழியாக ஒரு கன்னியாஸ்திரீயால் வீசி எறியப்பட்டு கொல்லப்பட்டது வரை 19 மணி நேர சாட்சியமளித்துள்ளார்.

அவரது குற்றசாட்டுகளில் முக்கியமானது அவர் தோட்டத்திலிருக்கும்போது கண்ணாடிகள் நொறுங்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கும்போது சிறுவன் ஒருவன் வீசியெறியப்பட்டதைக் கண்டதும் ஓடிச்சென்று பார்த்தபோது அவன் உயிரிழந்திருந்ததும், அதைப் பார்த்ததால் ஒரு கன்னியாஸ்திரீ அவரைக் காதைப்பிடித்து இழுத்துக் கொண்டு போனதும் ஆகும்.

இன்னொரு சம்பவத்தின்போது படகிலிருந்து ஒரு சிறுவன் தண்ணீரில் வீசியெறியப்பட்டதைக் கண்டிருக்கிறார் Dale.

ஒரு முறை இரவு ரோந்துக்காக செல்லும் ஒரு கன்னியாஸ்திரீ Daleஐயும் உடன் அழைத்துச் செல்ல, ஒரு அறையிலிருந்து வீறிடும் சத்தம் வருவதைக் கேட்டு அங்கு சென்றபோது ஒரு கன்னியாஸ்திரீ குழந்தை ஒன்றை பிரசவித்ததைக் கண்ணால் பார்த்திருக்கிறார் Dale.

மறு நாள் இன்னொரு கன்னியாஸ்திரீ அந்தக் குழந்தையின் முகத்தில் தலையணையை அழுத்திக் கொன்றதையும் கண்ட Dale நடுநடுங்கிப் போயிருக்கிறார். சிறுவன் ஒருவன் ஷாக் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறான்.

இன்னொரு சிறுவன் கடும் பனியில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு குளிரில் உறைந்து இறந்திருக்கிறான்.

இத்தனை குற்றச்சாட்டுகளில் பல தள்ளுபடி செய்யப்பட்டு, சில ஒரு சிறிய தொகை இழப்பீடாக கொடுக்கப்பட்டு அமைதியாக்கப்பட, பாலியல் துஷ்பிரயோகங்கள் முதல் கொலைக் குற்றச்சாட்டுகள் வரை கிட்டத்தட்ட மறக்கப்பட்டு போன நிலையில் மீண்டும் தொடங்கப்பட்ட இந்த வழக்கில் நான்காண்டுகள் நடைபெற்ற விசாரணையில், நடந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களுக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

முக்கியமாக சிறுவன் ஒருவன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கிற்கு உறுதியான ஆதாரம் கிடைத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த காப்பகத்துடன் தொடர்புடைய சபைப் பிரிவு, புகார்கள் அளிக்கும் நடவடிக்கையை தொடங்கியிருப்பதாகவும், குழந்தைகள்

பாதுகாப்புக்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்