போதையில் மகளை விமர்சித்த நண்பன்: தந்தை எடுத்த விபரீத முடிவு!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் மது போதையில் தன்னுடைய மகளை கேலி செய்த நண்பனை, தந்தை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் William Lewis Porter (50). இவர் தன்னுடைய நண்பன் David Brady (54) உடன் இணைந்து பூங்கா ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.

போதை அதிகமான நிலையில், Porter-ன் 18 வயது மகளான Celina Marie குறித்து David தவறான கருத்து ஒன்றினை கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த Porter, தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு David-ஐ சுட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் David உடலை தன்னுடைய காரின் பின்பகுதியில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிய Porter, நடந்தவற்றை மகளிடம் விளக்கி கூறியதோடு, புதைக்க உதவுமாறும் உதவி கேட்டுள்ளார்.

இதனையடுத்து இருவரும் இணைந்து 40 நிமிட தூரத்தில் உள்ள ஏரி ஒன்றில் David உடலை தூக்கி வீசியுள்ளனர்.

இந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொண்டு, Porter மற்றும் உடந்தையாக இருந்த மகளை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து பொலிஸார் தரப்பில் தெரிவிக்கையில், Porter பலமாக அவனுடைய நண்பரை தாக்கிய பின்னர் தான், நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். தற்போது இருவருமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விரிவான விசாரணைக்கு பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers