10 வயது மகனை கழிவறையில் மூழ்கடித்து கொல்ல முயற்சித்த தாய்? அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் தாய் ஒருவர் மகனின் தலையை கழிவறையில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சிப்பதை போன்ற வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த Kaitlyn Wolf என்ற பெண் தன்னுடைய இளைய மகனை, கழிவறையில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சிப்பதை போன்ற வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் பெரும் வைரலாக பரவியது.

இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஏராளமான போன் கால்களும் பொலிஸ் நிலையத்திற்கு சென்றடைந்தது.

இந்த நிலையில் வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள Kaitlyn, அன்றைய தினம் நானும் என்னுடைய இரண்டு மகன்களும் விளையாடி கொண்டிருந்தோம். என்னுடைய இளைய மகன் பல் விலக்காமல் இருந்ததால், அவனை பயமுறுத்துவதற்காகவே அப்படி செய்தேன்.

ஆனால் என்னுடைய மகனை நான் மூழ்கடிக்கவே இல்லை. அவன் தலையில் ஒரு சொட்டு நீர் கூட படவில்லை. என்னுடைய மூத்த மகன்தான் அந்த வீடியோவை எடுத்தான். முன்னாள் தோழி ஒருவருக்கு நான் இந்த வீடியோவை அனுப்பி, சிறுவர்களை இப்படியும் திருத்தலாம் என கூறியிருந்தேன்.

அந்த வீடியோவை அவர் மற்றோருக்கு தோழிக்கு அனுப்ப, அப்படியே இணையத்தில் வைரலாகி விட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் பலரும் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர் என விளக்கம் அளித்துள்ளார்.

அதேசமயம் இதுகுறித்து ஏராளமான புகார்கள் குவிந்துள்ளதால் குழந்தைகள் நல அமைப்பும், துப்பறியும் துறை ஆய்வாளர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers