அமெரிக்காவில் அழகி பட்டத்தை தட்டிச் சென்ற கருப்பின பெண்! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவின் 2019-ஆம் ஆண்டுக்கான அழகியாக நியா பிராங்ளின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் அமைந்துள்ள அட்லாண்டிக் நகரில் , நடைபெற்ற அழகிப் போட்டியில் 50 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதில் 2019-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிய பிராங்ளினுக்கு, நடப்பு ஆண்டின் அழகியான காரா மன்ட் கிரீடம் சூட்டினார்.

அமெரிக்க அழகிப் பட்டத்தை தட்டிச்சென்றுள்ள 25 வயதான கருப்பின பெண்ணான நியா பிராங்ளின் இறுதி சுற்றில், கல்வியில் அனைவருக்கும் சமவாய்ப்பு வேண்டுமென்று கூறி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பட்டம் வென்ற நியா பிராங்ளின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers