மலை உச்சியில் காத்திருந்த அதிர்ச்சி: கழுத்து உடைந்த நிலையில் பலியான இளம்பெண்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

கொலம்பியவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலைக்குன்றிலிருந்து தவறி விழுந்து, கழுத்து உடைந்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கொலம்பியன் மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் உள்ள ஒரு மலை குன்றில், பவுலா ஆண்ட்ரியா ராமோஸ் மோலினா (22) என்ற இளம்பெண் தன்னுடைய நண்பர்களுடன் ஏறும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அனைவரும் ஜோடிகளாக பிரிந்து குன்றில் ஏறிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கடுமையான விஷம் கொண்ட ஆப்பிரிக்க தேனீக்கள் கூட்டம் வேகமாக மோலினாவை நோக்கி வந்துள்ளது.

இதனால் பயந்துபோன மோலினா தன்னுடைய பிடிப்பை தளர விட்டதால், மலை குன்றிலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மோலினா, கழுத்து முறிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதேசமயம் அவருடன் சேர்ந்து சென்ற மற்றொரு பெண் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடிய விஷம் கொண்ட ஆப்பிரிக்க தேனீக்கள், முதன்முதலில் கடந்த 1956-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் தேன் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது ஆனால் அடுத்த ஆண்டிலேயே 26 தேனீக்கள் அங்கிருந்து தப்பி சென்றன.

அவை தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் பலுகிப்பெருகின.

பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த தேனீக்களால் உயிரிழந்துள்ளனர். இதில் பசுக்களும் குதிரைகளும் அடங்கும். இவை கடந்த 1990-ம் ஆண்டு முதல் டெக்ஸாஸ் மாகாணத்தில் பரவ ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers