அமெரிக்காவை தாக்கிய அதிபயங்கர புயல்! ஒன்றரை லட்சம் மக்கள் தவிப்பு- நேரலை வீடியோ

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் கடலோர பகுதிகளை புளோரென்ஸ் புயல் தாக்கியதைத் தொடர்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இருளில் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரென்ஸ் புயல், அமெரிக்காவின் கிழக்கு பகுதியை தாக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புயல் தாக்கும் என்று கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, மேற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரென்ஸ் புயல் தாக்க தொடங்கியது. 100 கிலோ மீற்றர் வேகத்தில் கடுமையான காற்று வீசியதால் எழுந்த கடல் அலைகள், ஆக்ரோஷமாக கரையோர பகுதிகளை தாக்கின.

இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது. புயலின் சீற்றம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஹூஸ்டனில் ஹார்வே புயல் ஏற்படுத்திய தாக்கத்தைப் போன்று, இந்த புயலும் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers