என்னை துஷ்பிரயோகம் செய்யும்போது அவள் என் அருகில்தான் அமர்ந்திருந்தாள்: இளம்பெண்ணின் அதிர்ச்சிக் கதை

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரின் மனைவி தன் அருகில் அமர்ந்திருந்ததாகவும், தன்னை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யுமாறு தனது கணவனை அவள் தூண்டியதாகவும் ஒரு அமெரிக்கப் பெண் அதிர்ச்சி செய்தி ஒன்றைக் கூறியுள்ளார்.

Elizabeth Smart 14 வயதாக இருக்கும்போது Wanda Barzee (64) என்னும் பெண், ஆறு பிள்ளைகளுக்கு தாயாக இருந்தபோதிலும்கூட சற்றும் இரக்கமின்றி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அவளது கணவனின் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததோடு தொடர்ந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்யுமாறு உற்சாகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

தன்னை ஒரு அடிமை போலவே அவள் நடத்தியதாகவும் தன்னை மிகவும் மோசமாகவே எப்போதும் நடத்தியதாகவும் Elizabeth தெரிவித்தார்.

மனசாட்சியற்று செய்த குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் Wanda Barzee, அடுத்த வாரம் விடுதலை செய்யப்பட இருக்கிறார்.

ஏற்கனவே 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த Wanda Barzee, தனது தண்டனைக்காலம் முடிவதற்கு ஆறு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவள் சமுதாயத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவள் என்று கூறி Elizabeth அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Elizabeth தனது படுக்கையறையில் இருக்கும்போது ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த Wandaவின் கணவனான Brian David Mitchell, அவளைக் கத்தி முனையில் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தான்.

இந்த சம்பவம் அந்த நேரத்தில் நாடு முழுவதும் பலத்த பய அலைகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers