9 வயதில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி! எழுதி வைத்திருந்த குறிப்புகளை கண்டு மனம் உடைந்த பெற்றோர்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த ஒன்பது வயது சிறுமி வருங்காலத்தில் நான் எங்கு எல்லாம் செல்ல வேண்டும், எதை எல்லாம் பார்க்க விரும்புவதாக தன்னுடைய நோட்டில் எழுதி வைத்திருப்பதை பெற்றோர் கண்டு கண்ணீர் வடித்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமியான Brooklynn Newville, அவருடைய சகோதரன் Jace(5) ஆகியோர் தன்னுடைய பாட்டியுடன் காரில் சென்றுள்ளனர். காரின் உடன் உறவினர் ஒருவர் இருந்துள்ளார்.

அப்போது காரானது Wellston பகுதியில் சென்ற போது விபத்தில் சிக்கியதால், காரில் இருந்த Brooklynn Newville மற்றும் Jace சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர்.

காரை ஓட்டி வந்த பாட்டி மற்றும் உடன் இருந்த உறவினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்நிலையில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் Shanée மற்றும் Brian, அவர்களின் படுக்கைஅறையை சுத்தம் செய்த போது, அங்கு 9 வயது மகளான Brooklynn Newville நோட்டு ஒன்றில் தான் வருங்காலத்தில் எங்கு எல்லாம் செல்ல வேண்டும், எதை எல்லாம் பார்க்க வேண்டும் அதாவது Bucket List போட்டு வைத்துள்ளார்.

அதில் நியூயார்க்கில் இருக்கும் உயரமான டவரை பார்க்க வேண்டும். scuba diving போக வேண்டும், படகில் யாருடைய உதவியுமின்றி தனியாக செல்ல வேண்டும், காட்டெருமையை பார்க்க வேண்டும், மெக்சிகோ செல்ல வேண்டும் என்று இப்படி ஒரு நீண்ட லிஸ்டை அதில் எழுதியுள்ளார்.

இதைக் கண்ட அவர்கள் தங்களுடைய மகளின் ஆசையை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி, மகள் என்ன எல்லாம் செய்ய நினைத்தாலோ நாம் அதை செய்து அவளின் ஆசையை நிறைவேற்றுவோம் என்று முடிவு செய்துள்ளனர்.

தற்போது மாணவி எழுதியிருந்த அந்த Bucket List இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers