10 வயது மகளை கர்ப்பமாக்கிய அம்மாவின் காதலன்! 160 ஆண்டுகள் சிறை: அதிரவைக்கும் பின்னணி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் காதலியின் 10 வயது மகளை கர்ப்பமாக்கிய இளைஞருக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் Indianapolis பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவர், தனது காதலன் Thrash (34) மற்றும் 10 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

அந்த சிறுமியின் வயிற்று பகுதி திடீரென பெரிதாக இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டார்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் உடனடியாக அவரது அம்மாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.

Thrash, 8 வயதிலிருந்தே சிறுமியை துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

இடையில் சிறுமியின் வயிற்று பகுதி பெரிதாக இருப்பதை அறிந்த தாய், மருத்துவமனைக்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவருக்கு யாரும் உதவி செய்ய முன்வராததால் கரு வளர்ச்சியடைந்துள்ளது.

இதனையடுத்து குற்றவாளியை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நீதிபதி கேட்ட கேள்விக்கு பதிலளித்த குற்றவாளி,, நான் சிறுமியை துஸ்பிரயோகம் செய்யவில்லை. என்னுடைய விந்தணுவை அவருடைய அம்மா தான் கருப்பையில் திணித்தார் என குற்றம் சுமத்தினர்.

இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில் சிறுமிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவர்கள் மேற்கொண்ட டிஎன்ஏ பரிசோதனையில் Thrash குற்றாவளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி குற்றவாளிக்கு 160 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.

மேலும், 136 ஆண்டுகால சிறை தண்டனைக்கு பின்னரே குற்றவாளிக்கு பரோல் வழங்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

இதில் சம்மந்தப்பட்ட சிறுமியின் தாய்க்கு விரைவில் தண்டனை அறிவிக்கப்படும் எனவும், சிறுமியின் குழந்தை தத்தெடுக்கப்படுவதோடு, சிறுமியின் தேவைகளை மாகாண அரசு ஏற்கும் எனவும் தீர்ப்பளித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்