தலையில் துப்பாக்கி குண்டு பாயும்! டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர், மூன்று மாதங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஷர்வன் ரிச்சர்டு கிறிஸ்டி(27) என்ற இளைஞர், கடந்த ஜூன் மாதம் தனது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார்.

அதில், ‘உங்கள்(டிரம்ப்) தலையில் துப்பாக்கி குண்டு பாயும், அது விரைவில் நடக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்’ என அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார், இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கிறிஸ்டி உடனடியாக தலைமறைவாகினார்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்த பொலிசார், மூன்று மாதங்களுக்கு பிறகு ஒகியோவில் வைத்து கிறிஸ்டியை தற்போது கைது செய்துள்ளனர்.

அவரிடம் இருந்து ‘380 காலிபர்’ ரக துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் பொலிசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கிறிஸ்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கார்கள் மற்றும் துப்பாக்கிகளை திருடி அமெரிக்கா மற்றும் கனடாவில் விற்று வந்தது தெரிய வந்தது.

மேலும் பொலிசார் தன்னை தேடுவதை அறிந்த கிறிஸ்டி, பென்சில்வேனியாவில் இருந்து நியூயார்க் மற்றும் கனடாவிற்கு தப்பி சென்றுள்ளார். பின்னர் அமெரிக்காவுக்கு திரும்பிய அவர் ஒகியோ வந்தடைந்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்