திருமணத்தன்று நடந்த பெரிய விபத்து... காதல் மனைவி சொன்ன வார்த்தை: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் திருமணத்தின் போது விபத்து நடந்ததால், காதல் மனைவி அவரை நீங்கள் கண்டிப்பாக இப்போது செல்ல வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்துள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டாவைச் சேர்ந்தவர் ஜெர்ரிமி பவுராசா. இவர் செயின்ட் பால் பார்க்கில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தன் காதலியான க்ரிஸ்டாவை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். ஆனால் அப்பகுதியில் திருமண ஹால் அனைத்தும் புக் செய்யப்பட்டு இருந்ததால், தான் வேலை செய்யும் தீயணைப்பு நிலையத்திலேயே கடந்த 24-ஆம் திகதி காதலியை கரம் பிடிக்க முடிவு செய்திருந்தார்.

அதற்கான திருமண அறிவிப்பை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தினார். தீயணைப்பு நிலையம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வித்தியாசமாகக் காட்சியளித்தது.

அப்போது பெண்ணும், மாப்பிள்ளையும் மணப்பெண்களாக ஜொலித்தனர். மோதிரத்தை அணிந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவினர். அந்த நேரத்தில் திடீரென அலாரம் ஒலித்தது.

அதில் அருகில் இருக்கும் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் இருக்கும் வீடுகளிலும் அது பரவுகிறது. உடனடியை தீயை அணைக்க வீரர்கள் இங்கு வர வேண்டும் என்று அறிவிப்பு வந்தது.

தீ வேகமாக பரவி வருவதால், அனைத்து வீரர்களுமே செல்ல வேண்டிய நிலை. சற்றும் யோசிக்காத க்ரிஸ்டா தன் காதல் கணவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, நீங்கள் அங்கு செல்ல வேண்டியது அவசியம் என்று கூறினார்.

உடனே திருமண ஆடைகளை மாற்றிக் கொண்டு தீயணைப்பு உடையை அணிந்து வந்து நின்றார். அங்கிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வரவேற்பு நிகழ்வுக்குக் காக்க வைப்பதற்கு மன்னிக்கவும். வந்து விடுகிறேன் என்று கூறி புறப்பட்டார்.

ஜெர்ரிமி வேனில் ஏறி விடைபெறும் காட்சியைப் புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மூன்று மணி நேரம் கழித்து பணிகள் முடிந்து தீயணைப்பு நிலையத்துக்கு ஜெர்ரிமி வந்து சேர்ந்தார்.

ஆடைகளை மாற்றிக்கொண்டு டின்னர் நிகழ்வில் க்ரிஸ்டாவின் கைகளைப் பற்றிக்கொண்டு நடனமாடினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்