அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு: இருவர் காயம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திடீரென ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு சிறுவன் உட்பட இருவர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இண்டியானா மாகாணத்திலுள்ள வால்மார்ட் சூப்பர் மார்க்கெட்டில் திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

சுமார் 12 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பொலிசாரும் அவசர உதவிக்குழுவினரும் சூப்பர் மார்க்கெட் அருகே குவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் நிலை என்ன என்பது குறித்து அவர்கள் தெரிவிக்கவிலை. சூப்பர் மார்க்கெட்டில் வைக்கப்பட்டுள்ள CCTVகாட்சிகளின் அடிப்படையில் பொலிசார் கருப்பு சட்டை அணிந்த ஒரு நபரை தேடி வருகிறார்கள்.

அதே நேரத்தில் உள்ளூர் ஊடகங்கள், பலர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளன. அதேபோல் சம்பவம் நடந்தபோது சூப்பர் மார்க்கெட்டிலிருந்த வாடிக்கையாளர்கள்,இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்கள், ஆனால் பொலிசார் இதை உறுதி செய்யவில்லை.

துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியவன் இன்னும் வெளியே நடமாடுவதால் மக்கள் பாதுகாப்பாக வீடுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருக்குமாறு பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers