அம்மாவை ஃப்ரீஸரில் வைத்திருக்கிறேன்: பள்ளிக்கு போகச் சொன்னதற்காக மகன் செய்த செயல்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் பள்ளிக்கு போகச் சொல்லி தொந்தரவு செய்ததாகக் கூறி தனது தாயைக் கொன்று துண்டுகளாக்கி குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்துள்ளான் ஒரு இளைஞன்.

பொலிசாருக்கு போன் செய்த Yu Wei Gong என்னும் Hawaiiஐச் சேர்ந்த அந்த இளைஞன், தனக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுவதாக தெரிவித்தான்.

பின்னர் தன் தாயைக் கொலை செய்துவிட்டதாக அவன் கூற விரைந்து வந்த பொலிசார் அவனைக் கைது செய்தனர்.

அவனது தாயான Liu Yun Gongஐ வீடு முழுவதும் தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. Yu Wei Gongஐ விசாரித்தபோது அவன் தன் தாயை ஃப்ரீஸரில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளான்.

பொலிசார் குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது ஃப்ரீஸருக்குள் தலை தனியாகவும் உடல் பாகங்கள் தனியாகவும் ஏழு பிளாஸ்டிக் பொட்டலங்களுக்குள் கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஏன் அவ்வாறு செய்தாய் என்று கேட்டதற்கு Yu Wei Gong, தனக்கு படிக்க விருப்பம் இல்லை என்றும், தன் தாயோ தொடர்ந்து தன்னை பள்ளிக்கு போகுமாறு நச்சரித்ததாகவும் அதனால் அவளைக் கொன்றுவிட்டதாகவும் தெரிவித்தான். அவனுக்கு 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்