இனி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்: மைக்கேல் சூறாவளி குறித்த தற்போதைய செய்திகள்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

ஃப்ளோரிடாவின் Okaloosa பகுதியில் மழை பெய்யத்தொடங்கிவிட்ட நிலையில், மைக்கேல் சூறாவளியை ஒட்டி வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஃப்ளோரிடா மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததுபோக, இனி யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், இருக்கும் இடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும் தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நான்காம் வகை சூறாவளியாக உருவெடுத்துள்ள மைக்கேல் தற்போது மணிக்கு 140 மைல் வேகம் எடுத்துள்ளது.

அது இன்னும் வலுப்பெறும் என்றும், நிலப்பகுதியை அடையும்போது அதன் வேகம் மணிக்கு 145 மைல் அல்லது அதைவிட அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மைக்கேல் சூறாவளி, பனாமா நகர் கடற்கரைக்கு 100 மைல்கள் தெற்காக மையம் கொண்டுள்ளது.

உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் விதத்தில் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்புவதோடு 6 முதல் 10 இஞ்ச் வரை மழைப்பொழிவு இருக்கும் என்பதால், பெரு வெள்ளம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

பலத்த காற்றின் காரணமாக மின்தடை ஏற்படும் என்பதால் பல மில்லியன் மக்கள் இருளில் வாடும் நிலைமை ஏற்படும்.


தென்மேற்கு ஜார்ஜியா வரையான 4 மில்லியன் மக்களுக்கு சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் பாதிக்கப்பட்ட கரோலினா பகுதிகளிலும் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers