2 கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு 10 ஆயிரம் டொலர்கள் டிப்ஸ் கொடுத்த நபர்: வித்தியாச காரணம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள ஹோட்டலில், இளைஞர் ஒருவர் வெறும் 2 கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு $10000 டொலர்கள் டிப்ஸ் கொடுத்துவிட்டு சென்றுள்ள ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் தென் கரோலினாவில் செயல்பட்டு வரும் சப் டாக்ஸ் ஹோட்டல் மிகவும் பிரபலமான ஒன்று. அப்பகுதியில் உள்ள பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரும் அங்கு தான் கூட்டமாக வந்து உணவருந்துவார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீஸ்ட் என்ற நபர் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அங்கு அலைனா கஸ்டர் என்ற பணிப்பெண்ணிடம் இரண்டு கிளாஸ் தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டுள்ளார்.அதன்படி இரண்டு கிளாஸ் தண்ணீர் கொண்டு வந்ததும், அதை குடித்து விட்டு மேஜையில் டிப்ஸ் வைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.

மேஜைக்கு அருகில் வந்த அலைனா ஏராளமான பணம் இருப்பதை பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளார்.

என்ன செய்வதென தெரியாமல், திகைத்தபோது பக்கத்து மேஜையில் இருந்த இரண்டு இளைஞர்கள் காமிரா மூலம் படம் பிடித்து கொண்டிருப்பதை கவனித்து விட்டார். அவர்களிடம் சென்று இங்கு என நடக்கிறது என கேட்டபொழுது, அவர்கள் இருவரும் 'ஜிம்மி' என்ற யூடியூப் சேனலை பதிவு செய்யுமாறு கூறியுள்ளனர்.

உடனே அந்த பணத்தை எடுத்த அலைனா, ஹோட்டல் உரிமையாளர் பிரெட் ஒலிவீரியோவிடம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் திரும்பி வந்த பீஸ்ட் நடந்தவை பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். அப்போது கூறிய அவர், தான் ஒரு யு டியூப் சேனல் நடத்தி வருவதாகவும், யாருக்காவது உதவி செய்து அவர்களுடைய முகத்தில் ஏற்படும் சந்தோசத்தை பார்க்க வேண்டும் என தான் ஆசைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் மிகவும் அருமையாக இருந்ததால் தான் அவ்வளவு பணத்தை வைத்ததாகவும், அதை எடுத்தபோது அலைனா முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை தான் மறைந்திருந்து பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் பீஸ்ட்டை கட்டியணைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அலைனா, அந்த பணத்தை எடுத்து எண்ணும்போது அதிகமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட ஹோட்டல் உரிமையாளர் பிரெட், $10000 டொலர்களை ஊழியர்கள் அனைவருக்கும் பிரித்துக்கொடுப்பேன் என கூறி, அலைனாவிற்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers