பத்திரிகையாளர் கொலையில் சவுதியின் விசாரணை திருப்திகரமாக இல்லை: டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு

Report Print Kabilan in அமெரிக்கா

சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜமாலின் கொலை குறித்து, சவுதியிடமிருந்து வரும் தகவல்கள் திருப்திகரமாக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியின் இளவரசரை விமர்சித்ததற்காக ஜமால் துண்டு துண்டாக வெட்டி, காட்டுக்குள் அந்நாட்டு அதிகாரிகள் வீசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் விளக்கம் திருப்திகரமாக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது குறித்து சவுதியிடமிருந்து வரும் தகவல்கள் திருப்திகரமாக இல்லை. எனினும் அவர்களிடமிருந்து விசாரணை குறித்து வரும் தகவல்களை இழக்க விரும்பவில்லை. நாம் இந்த வழக்கின் ஆழம் வரை செல்ல வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் தரப்பில் கூறுகையில் ஜமால் கொல்லப்பட்டிருப்பது மிகப் பெரிய தவறு என்றும், அவரது மரணத்திற்கு இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டதை மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...