காதலியின் உதட்டை கடித்து எறிந்த காதலன்: நீதிமன்றம் விதித்த கடும் தண்டனை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் பிரிந்து சென்ற காதலியிடம் அடையாளம் வைப்பதற்காக அவருடைய உதட்டை கடித்து எறிந்த காதலனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கைலா ஹேய்ஸ் என்ற 17 வயது பெண், 21 வயது இளைஞரான சேத் ஆரோன் ஃப்ளூரி என்பவரை 2016ம் ஆண்டு முதல் காதலித்துள்ளார்.

இருவரும் சேர்ந்து டேட்டிங் சென்று வந்துள்ளனர். ஆரோன் தன்னை ஒரு பொருளை போன்றே நடத்துவதை உணர்ந்த கைலா, அவனிடம் இருந்து பிரிய முடிவு செய்துள்ளார்.

அப்பொழுது கப்பற்படையில் வேலை கிடைத்திருப்பதை மகிழ்ச்சியாக தெரிவிக்க ஆரோன், கைலாவை சந்திக்க சென்றுள்ளான்.

அங்கு நடந்த சம்பவம் பற்றி கைலா கூறுகையில், கையில் மலர்க்கொத்து மற்றும் வாழ்த்து அட்டை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.

வாழ்த்து அட்டையை படித்து முடித்ததும், என்னிடம் ஏதேனும் கூற விரும்புகிறாயா என ஆரோன் கேட்டான். நான் இனி உன்னுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை என பதிலளித்தேன். உடனே ஆத்திரமடைந்த அவன் அந்த பூங்கொத்து மற்றும் வாழ்த்து அட்டையை என்னுடைய தலையின் மீது வீசி எறிந்தான்.

இங்கிருந்து கிளம்பி விடு என கூறினான். நான் என்னுடைய கார் அருகே சென்ற போது, என்னை இழுத்து முத்தமிட முயன்றான். நான் அவனை தள்ளிவிட்டேன்.

மீண்டும் என்னிடம் நெருங்கிய அவன், என்னுடைய கீழ் உதட்டை கடித்து எறிந்தான். வலி தாங்க முடியாமல் நான் கத்த ஆரம்பித்துவிட்டேன். பின்னர் என்னுடைய தலைமுடியை பிடித்து கன்னத்தில் அறைந்தான் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு கைலாவிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. அதில் 300 தையல்கள் போடப்பட்டன.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆரோன் கடந்த 18ம் தேதியன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டான்.

அப்பொழுது வழக்கு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers