மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்: அனாதையான 3 குழந்தைகள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில், மர்மமாக இறந்து கிடந்த தம்பதியின் வழக்கில் அதிரடி திருப்பமாக மனைவியை கணவனே கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

நியூயார்க் நகரத்தில் உள்ள வீடு ஒன்றில் கணவன் - மனைவி இருவரும் இறந்துகிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், 41 வயதான Stephanie தன்னுடைய கணவர் மரியோவிடம் இருந்து கடந்த மாதம் 28ம் தேதி விவாகரத்து கோரியுள்ளது தெரியவந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்து தான் தற்போது மரியோ, மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகளை இருப்பதாகவும், மூவரும் 15 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்