காதலனின் மகனை கொடூரமாக அடித்து கொலை செய்த இளம்பெண்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர், காதலன் மீது இருந்த ஆத்திரத்தில் 14 மாத குழந்தையை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த அம்பர் ரீவ்ஸ் என்ற 24 வயது இளம்பெண் தன்னுடைய காதலன் மீது இருந்த ஆத்திரத்தில், அவருடைய 14 மாத மகன் லோகன் ட்ரேசியை, கடந்த அக்டோபர் 11ம் திகதியன்று அடி வயிற்றில் கொடுரமாக அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனையடுது மீட்கபட்ட குழந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தது. ஆனால் அனுமதிக்கபட்ட 2 நாளில் சிகிச்சை பலனின்றி பரிதபமாக உயிரிழந்துள்ளது.

இதனையடுது கைது செய்யபட்ட அம்பர், மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். அங்கு வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு $7,500 டொலர்கள் அபராதமும், 15 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து தீர்பளித்து உத்தரவிட்டார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்