பல வருடமாக குழந்தை பிறக்காத விரக்தியில் இளம்பெண் செய்த செயல்: மனைதை உருக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், இனி குழந்தையே பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், பொம்மை ஒன்றினை வாங்கி அதனை தன்னுடைய குழந்தையாக நினைத்து மனதை தேற்றி வருகிறார்.

அமெரிக்காவை சேர்ந்த 38 வயதான மேரி மேங்கோ என்ற பெண், தன்னுடைய இளம் வயதிலிருந்தே குழந்தைகளின் மீது அதிக ஆர்வமாக இருந்துள்ளார்.

இளம்வயதில் பக்கத்து வீட்டு குழந்தைகளை பார்த்து தானும், ஒரு தாயக மாறும்போது எப்படியெல்லாம் குழந்தையை வளர்க்க வேண்டும் என கனவு கண்டுள்ளார்.

ஆனால் அவருடைய துரதிஷ்டமாக அவருடைய 24 வயதில், டர்னர் சிண்ட்ரோம் தாக்குதலின் காரணமாக அவருடைய கர்ப்பப்பையில் இனி குழந்தைகள் பெற முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளார்.

இதனால் மேரி, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதன் பிறகு குழந்தையை தத்தெடுத்தாவது வளர்க்கலாம் என மேரி நினைத்துள்ளார்.

ஆனால் அதற்குள் 2014-ம் ஆண்டு அவருக்கு முடக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் குழந்தை தத்தெடுக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்தடுத்த சோதனைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட மேரி மனஅழுத்தத்திற்கு உள்ளாகி தனிமையிலேயே இருந்துள்ளார்.

அந்த சமயம் அவருக்கு உறுதுணையாக இருந்த அவருடைய குடும்பம் சிறிது சிறிதாக அவரை தேற்றி வந்துள்ளனர். இதற்கிடையில் நண்பர் ஒருவரின் மூலம் பெல்லா என்ற குழந்தை வடிவிலான பொம்மையினை வாங்கி அதனை தன்னுடைய குழந்தையை போலவே வளர்த்துள்ளார்.

அதற்கு மேக்கப் போடுவது, அலங்காரம் செய்வது என இருந்த மேரிக்கு, நாட்கள் செல்ல செல்ல தற்போது மனஅழுத்தம் குறைந்து தற்போது இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers