உலக அரங்கை உலுக்கிய கொலை... தடுமாறும் விசாரணை: தகவல் அளித்தால் பல ஆயிரம் டொலர் வெகுமானம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

உலக வங்கி பொருளாதார நிபுணர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு 25,000 டொலர் வெகுமானம் அளிக்க இருப்பதாக விசாரணை குழு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி தமது குடியிருப்பில் வைத்தே உலக வங்கியின் பொருளாதார மேதையான ஜோகன் டி லீடே கொல்லப்பட்டார்.

அதிகாலை 1 மணி வேளையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஜோகன் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.

நீண்ட இரண்டரை ஆண்டுகள் நடைபெற்ற இந்த விசாரணையில் பொலிசாருக்கு போதிய ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள், அவரது கொள்கைகளை எதிர்த்தவர்கள் என திரளானோரிடம் விசாரணை மேற்கொண்ட பின்னரும் உறுதியான முடிவுக்கு வர பொலிசாரால் முடியவில்ல.

உலக வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வந்த ஜோகனுக்கு எதிராளிகள் எவரும் இருப்பதாக பொலிசாரால் நிறுவ முடியவில்லை.

ஆனால், சம்பவத்தன்று ஜோகன் கொல்லப்பட்ட பின்னர் அவரது குடியிருப்பின் அருகாமையில் இருந்து வாகனம் ஒன்று அவசரமாக வெளியேறியதை அப்பகுதியில் சிலர் பார்த்துள்ளனர்.

இருப்பினும் அந்த வாகனத்தை இதுவரை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிவிப்போர்களுக்கு பல ஆயிரம் டொலர் வெகுமானம் அறிவிக்கப்பட்டுள்ளதால்,

எவரேனும் தகவலுடன் பொலிசாரை அணுகுவார்கள் என்ற நம்பிக்கையில் விசாரணை குழு உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers