மகளை கொலை செய்த குற்றவாளி: நீதிமன்றத்தில் ஆவேசமான தந்தை! கதறி அழுத மனைவி

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் மகளை கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் புகுந்து தந்தை தாக்க முற்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நடாஷா லூச்சவ் என்ற பெண் தன்னுடைய முதல் கணவர் பீட்டர் ஆண்டர்சனை பிரிந்து காதலன் ரியான் பர்ஜ், 37 உடன் கடந்த 3 மாத காலமாக வசித்து வந்தார்.

பீட்டர் மூலம் நடாஷாவிற்கு பிறந்த 5 வயதான ஹார்ட்லி என்ற குழந்தை, வெள்ளிக்கிழமையன்று சுயநினைவில்லாமல் வீட்டில் கிடந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், என்னை நடந்தது என கேட்கும்பொழுது, கோபத்தில் குழந்தை தன்னைத்தானே தாக்கிக்கொண்டதாக பர்ஜ் கூறியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளிவந்துள்ளது. உடனே குற்றவாளி பர்ஜை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை பீட்டர், பாதுகாவலர்கள் அனைவரையும் மீறி, குற்றவாளியை தாக்க முயன்றார். உடனே அவரை தடுத்து நிறுத்திய போலிஸார் நீதிமன்ற வளாகத்திலிருந்து அவரை வெளியேற்றினர்.

இதற்கிடையில் என்ன செய்வதென தெரியாமல் சிறுமியின் தாய் நீதிமன்றத்திலே கதறி அழுதுகொண்டிருந்துள்ளார். இந்த சம்பத்தை பார்த்து கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர், குற்றவாளியை சிறையில் வைத்தே எரித்துக்கொள்ளுமாறு ஆவேசத்துடன் சத்தமிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers