காட்டுத்தீயால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் அமெரிக்க நகரம்: 27,000பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னிய நகராகிய பாரடைஸ் காட்டுத்தீயால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கிறது.

27,000பேர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6.30 மணியளவில் பற்றிய அந்த தீ, 20,000 ஏக்கர்களை கபளீகரம் செய்து விட்டது.

ஒரு மருத்துவமனை, ஒரு பெட்ரோல் நிலையம் உட்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தீயில் நாசமாகிவிட்டன.

நேற்று இரவு சுமார் 2,200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடியும், தீ இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.

மக்கள் கார்களை ஆங்காங்கு நிறுத்தி விட்டு குழந்தைகளையும் செல்லப்பிராணிகளையும் தூக்கிக் கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடுகின்றனர். மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணி தொடர்கிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers