ஒரே நாளில் 3 லொட்டரிகளில் பல மில்லியன்கள் அள்ளிய அதிர்ஷ்டசாலி

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நபர் ஒருவருக்கு ஒரே நாளில் 3 லொட்டரிகளில் பல மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

நியூ ஜெர்சி மாகாணத்தில் குடியிருக்கும் ரோபர்ட் ஸ்டூவார்ட் என்பவரே அந்த அதிர்ஷ்டசாலி.

கடந்த ஆகஸ்டு மாதம் ஒரே நாள் 3 லொட்டரிகளில் ரோபர்ட்டுக்கு 5 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ளது.

ஸ்க்ராச் கார்டு லொட்டரியில் ஜாக்பாட் பரிசாகும் இது. இந்த சந்தோசத்தில் மீண்டும் கடைக்கு சென்ற ரோபர்ட் மீண்டும் 2 லொட்டரி வாங்கியுள்ளார்.

அதிர்ஷ்டம் அவரை விட்டுவிடவில்லை. அந்த 2 லொட்டரியிலும் பரிசு விழுந்துள்ளது. தொகை மிக குறைவு என்றாலும், தொடர்ந்து லொட்டரியில் பரிசை வெல்லும் ரோபர்ட்டின் கதை அந்த நகரம் எங்கும் பரவியது.

ஆகஸ்டு மாதம் 2 ஆம் திகதி ஒரே நாளில் 3 லொட்டரிகளில் பரிசை அள்ளிய ரோபர்ட் தொடர்பில் அந்த லொட்டரி நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

பரிசாக கிடைத்த தொகையை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்ந்தளிக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers