காட்டுத்தீயின் நடுவில் சிக்கிக்கொண்ட பெண்: சினிமாவை மிஞ்சும் திக் திக் நிமிட வீடியோ

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் நடுவில் சிக்கி, பெண் ஒருவர் தப்பி செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தென் கலிபோர்னியாவில் உள்ள வென்டுரா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரப்பகுதிகளில் ஏற்பட்ட பயங்கரமான காட்டுத்தீயில் 20 ஆயிரம் ஏக்கர்கள் நாசமாகின.

2200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காட்டுத்தீ வேகமாக பரவியதை அடுத்து அப்பகுதியில் வசித்து வந்து 27000 மக்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் தீயின் நடுவில் சிக்கி உயிர்பிழைத்த ரெபேக்கா என்ற பெண், வீடியோ ஒன்றினை வெளியிட்டு தான் அனுபவித்த திகில் சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில், "நான் என் வாழ்க்கையில் அப்போதுதான் ஒரு வலுவான காற்றை உணர்ந்தேன். நெருப்பு மிக விரைவாக வந்தது. ஒருநிமிடம் அப்படியே அமைதியாக இருந்தது. அதற்குள் தீ மளமளவென எங்களுக்கு மேலே எழ ஆரம்பித்துவிட்டது. எனவே, நாங்கள் வெளியேற வேண்டியிருந்தது.

தீப்பிழம்புகளுக்கிடையே இரண்டு நிமிடங்கள் காரில் பயணம் செய்திருப்பேன். நான் இறந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். நல்ல வேளையாக உயிர்பிழைத்துவிட்டேன். நான் தற்போது பள்ளத்தாக்கில் இருக்கிறேன். ஆனால் இன்னும் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்