தன்னைக் கடித்த பாம்பை வித்தியாசமாக பழி வாங்கிய நபர்: வைரல் வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தன்னைக் கடித்து மூன்று நாட்கள் மருத்துவமனையில் படுக்க வைத்த பாம்பை வித்தியாசமாக பழி தீர்த்துக் கொண்டுள்ளார் ஒரு அமெரிக்கர்.

அமெரிக்காவைச் சேர்ந்த Bob Hansler, rattlesnake என்னும் ஒருவகை பாம்பு கடித்து மூன்று நாட்கள் ஐ.சி.யூவில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார்.

அவர் தன்னைக் கடித்த பாம்பை பழி தீர்ப்பதற்காக, அதே rattlesnake வகை பாம்பு ஒன்றை சமைத்து சாப்பிட்டு அதை வீடியோவும் எடுத்தி யூடியூபில் வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோ சுமார் அரை மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் rattlesnake வகை பாம்பு ஒன்றை தோலுரிக்கும் Bob, அதை பால் மற்றும் முட்டையில் வேகவைத்து கார்ன் ஃப்ளாரில் தோய்த்து பின் எண்ணெயில் பொறித்தெடுக்கிறார்.

பின்னர் தனது செல்ல நாய்க்கும் அதைக் கொடுத்து தானும் உண்டு மகிழ்கிறார். சமைக்கும்போது rattlesnake பாம்பின் விஷம் செயலற்றுப்போய்விடும் என்கிறார் Bob.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers