ஒரே குடும்பத்தின் 8 பேர் படுகொலை... 4 குடியிருப்புகளில் சடலம் மீட்பு: உலகை உலுக்கிய சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் தெற்கு ஓஹியோ மாகாணத்தில் தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பொலிசில் சிக்கியுள்ளனர்.

உலகம் எங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலையானது கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள பைக் கவுண்டியில் அரங்கேறியது.

தூக்கத்தில் இருந்த 8 பேர் கொண்ட குடும்பத்தை துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கிய கும்பல் ஒன்று, அப்பகுதியில் உள்ள நான்கு வெவ்வேறு குடியிருப்புகளில் சடலங்களை வீசிவிட்டு தப்பியது.

கொலை செய்தவர்கள் யார் எனவும், இதற்கான பின்னணி என்ன என்பதும் விசாரணை அதிகாரிகளுக்கு சவாலாகவே அமைந்தது.

குறித்த சம்பவத்தில் 20 வயதேயான தாயாரின் சடலத்தின் அருகே ரத்தத்தில் குளித்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 6 மாத குழந்தையும் இன்னொரு சிறுமியும் கொலைகாரர்களின் துப்பாக்கியில் இருந்து தப்பியுள்ளனர்.

இந்த நிலையில் நீண்ட பல மாதங்கள் விசாரணைக்கு பின்னர் ஓஹியோ பொலிசார் முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை இது என தெரிவித்துள்ள அரசு வழக்கறிஞர், கொலைக்கு காரணம் என்ன என்பதை வெளிப்படுத்த மறுத்துள்ளார்.

கைதான நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஜார்ஜ் "பில்லி" வாக்னர் III(47), அங்கேலா வாக்னர்(48), ஜார்ஜ் வாக்னர் IV(27) மற்றும் எட்வர்ட் "ஜேக்" வாக்னர்(26) ஆகியோரே கைதானவர்கள்.

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி பைக் கவுண்டியில் குடியிருந்து வரும் ரோடென் குடும்பத்தினர் 8 பேரை தலையில் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நிலயிலேயே 8 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். மட்டுமின்றி பழி தீர்க்கும் வகையில் பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரை 5 முறையும் ஒருவரை 9 முறையும் கொலைகாரர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மட்டுமின்றி கடைசியாக கொல்லப்பட்ட இருவரை கொடூரமாக தாக்கிய பின்னர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers