அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மகளின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விட்ட தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ரோசலி கண்ட்ரேஸ் என்ற 34 வயதான பெண், தவறு செய்த தன்னுடைய மகளை தண்டிக்க நினைத்துள்ளார்.
உடனே 13 வயது மகளை காரில் ஏற்றிக்கொண்டு தொலை தூரத்தில் உள்ள டிடே பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு கட்டாயப்படுத்தி மகளின் ஆடைகளை அவிழ்த்து விட்டு, நிர்வாணமாக வீடு வரை ஓடிவருமாறு கூறியுள்ளார்.
உடனே சிறுமியும் நிர்வாணமாக வீதியில் ஓட ஆரம்பித்துள்ளார். அப்பகுதி வழியே காரில் வந்த ஒரு நபர் இதனை பார்த்துவிட்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனை கண்டுகொண்ட ரோசலி, தன்னுடைய மகளை காரில் ஏறுமாறு கூறி, உள்ளே வைத்து சரமாரியாக அடித்துள்ளார்.
இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உடல் முழுவதும் இருந்த காயங்களை சிறுமி பொலிசாரிடம் காட்டினார் . இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், ரோசலியை கைது செய்தனர்.