தயவுசெய்து என்னை கொன்று விடாதீர்கள்.. கூச்சலிட்ட இளம்பெண்! விரைந்த பொலிஸ் பட்டாளத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in அமெரிக்கா
566Shares

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்டு, விரைந்து வந்த பொலிஸார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பயங்கரமான சத்தம் வருவதாக பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு ஆண் பொலிஸாருக்கு போன் செய்துள்ளார்.

அவர், என்னுடைய சகோதரி வெளியில் நின்று புகைபிடித்துக் கொண்டிருந்த போது, "தயவு செய்து என்னை கொன்று விடாதீர்கள்" என பெண் ஒருவர் கூச்சலிடும் சத்தம் கேட்டதாக கூறினார்.

நான் வெளியில் சென்ற போது, "ஏன் என்னுடைய துப்பாக்கியை நீ எடுக்கிறாய்?" என ஆண் ஒருவர் பேசும் சத்தத்தையும் கேட்டேன் என பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 6 பேர் கொண்ட பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளது. வேகமாக வீட்டை சுற்றி வளைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு அமைதியாக இருந்தது.

உள்ளே தேடுதல் வேட்டை நடத்திய போதும் எந்த துப்பாக்கியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தும் போது "கால் ஆப் டியூட்டி" கேம் விளையாடியிருப்பது தெரியவந்தது.

இதனை கேட்ட பொலிஸார் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்