ஞானஸ்நானத்தின்போது தவறிய குழந்தை, பதறிய பெற்றோர்: ஒரு திடுக் வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் தங்கள் குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர், பாதிரியார் குழந்தையை தவற விட, அதிர்ச்சியடையும் வீடியோ ஒன்று காண்போரையும் திடுக்கிடச் செய்துள்ளது.

குடும்பத்தார் தங்கள் குழந்தையுடன் ஆலயத்திற்கு வந்து குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காக அதை பாதிரியாரிடம் கொடுக்கின்றனர்.

மென்மையாக அந்த குழந்தையை வாங்கும் பாதிரியார், அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அதன் தலையில் தண்ணீரை தெளிக்க, சட்டென்று அந்த குழந்தை கையிலிருந்து வழுக்கி விடுகிறது.

அதைக் காப்பாற்றும் முயற்சியில் பாதிரியார் அதை பிடிப்பதற்காக கையை உயர்த்த, சற்றும் எதிர்பாராத விதமாக முகங்குப்புற விழுகிறது அந்தக் குழந்தை.

குழந்தையின் குடும்பம் முழுவதும் பதறிப்போக, அந்தக் குழந்தையின் ஞானத்தாய் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குழந்தையை தண்ணிரிலிருந்து தூக்கி அதன் தாயின் கைகளில் ஒப்படைக்கிறார்.

இவ்வளவு நேரம் புன்னகையுடன் காணப்பட்ட அந்த குழந்தையின் குடும்பத்தார் அனைவரின் முகங்களிலும் இருந்த புன்னகை சட்டென்று காணாமல் போக பாதிரியார் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபடி பின்வாங்குகிறார்.

அமெரிக்காவில் எந்த இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது என்பது தெரியவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்