54 வயது முதியவரை திருமணம் செய்த 24 வயது இளம் பெண்! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் 54 வயது நபரை திருமணம் செய்த 24 வயது இளம் பெண், தற்போது குழந்தை பெற்று அவருடன் தான் மகிழ்ச்சியாக நெருக்கமாக இருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் Arkansas மாகாணத்தின் Little Rock பகுதியில் Vince(54)-Wesleigh(24) ஜோடி வாழ்ந்து வருகின்றனர்.

தன்னை விட 30 வயது மூத்த நபரை திருமணம் செய்த Wesleigh அவரை பணத்திற்காகத் தான் திருமணம் செய்தார் எனவும் இவர்களின் தாம்பத்ய உறவு அந்தளவிற்கு இருக்காது எனவும் பலரும் கிண்டல் செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த தம்பதிக்கு தற்போது அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதையடுத்து இவர்கள் தங்களின் குடும்பவாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இருவரும் பேட்டியளித்துள்ளனர்.

இந்த தம்பதி முதன் முதலில் தங்களை கடந்த மூன்று வருங்களுக்கு முன்பு இணையத்தில் தான் சந்தித்துக் கொண்டனர். வின்சிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தாகியுள்ளது.

இந்த நிலையில் தான் வெஸ்லெய்யை திருமணம் செய்துள்ளார். தன்னை விட மூத்த நபரை திருமணம் செய்து கொண்டது ஒரு பாதுகாப்பாக இருக்கிறது. நான் என்னுடைய சிறு வயதிலே என் அப்பாவை இழந்துவிட்டேன்.

இவரை திருமணம் செய்த பின்பு அந்த கவலை எல்லாம் தெரியவில்லை. எங்கள் வயது வித்தியாசம் காரணமாக, தாம்பத்ய உறவு குறித்து பலரும் கூறுகின்றனர்.

ஆனால் உண்மையை சொல்லப்போனால், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அனைத்து வகையில் அவர் என்னை பத்திரமாக பார்த்து கொள்கிறார்.

Wesleigh ஒரு அற்புதமான பெண், நான் அவளின் உறுதியான முடியைப் பார்த்து முதலில் மயங்கினேன். அவளுடன் பேசிப் பழகிய போது எங்கள் நட்பு விரிவானது, காதலுக்கும், செக்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

காதல் வருவதற்கு வயதும் முக்கியமில்லை, அது எப்போது வேண்டும் என்றாலும் வரலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் Wesleigh நான் பல ஆண்களை பார்த்துள்ளேன், ஆனால் இவர் வித்தியாசமாக இருந்தார். அவரை முதலில் பார்த்த போதே காதலில் விழுந்துவிட்டேன் என்று கூறலாம்.

பல பெண்கள் நான் அவரை பணத்திற்காகத்தான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறுகின்றனர். ஆனால் அது எல்லாம் கிடையாது.

குழந்தை பெற்ற பின்னர் நான் முன்பை விட அதிக பொறுப்பில் இருக்கிறேன் என்பதை உணர முடிகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்