பெண்கள் கழிப்பறையில் திருநங்கைக்கு நேர்ந்த கொடுமை: சர்ச்சையில் சிக்கிய பள்ளி நிர்வாகம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் கழிப்பறையில் இருந்து வலுக்கட்டாயமாக திருநங்கை ஒருவர் வெளியேற்றப்படும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா பகுதியில் உள்ள ஒசாகா பள்ளியில் படித்து வருபவர் சீஸ் டால் என்ற திருநங்கை.

இவர் கடந்த 28ம் தேதியன்று பெண்கள் கழிப்பறைக்கு சென்று உபயோகப்படுத்தியுள்ளார்.

அப்போது அங்கு பெண் ஆசிரியையுடன் வந்த மற்ற ஆசிரியர்கள், உபயோகப்படுத்தி கொண்டிருந்தபோதே, ஒரு குச்சியினை கொண்டு கழிப்பறையின் கதவுகளை திறந்து வெளியில் செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள அந்த திருநங்கை, தான் ஒரு திருநங்கை என்பதாலே தன்னை பெண்கள் கழிவறையில் இருந்து வெளியேற்றுவதை போல் கருதுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ தற்போது 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரவையாளர்களை கடந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பள்ளியின் முதல்வர் மைக்கேல் லேகால், நவம்பர் 28 ம் திகதி பள்ளியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை குறிப்பிடத்தக்க வகையில் தவறாகப் பிரதிபலிக்கும் சமூக ஊடக பதிவுகள் பற்றி எனக்குத் தெரியும்.

எங்களுடைய பள்ளியில் எந்த ஒரு மாணவரும், எந்த நேரத்திலும், எந்த கழிவறையையும் பயன்படுத்த தடையில்லை என்பது முக்கியமான ஒன்று.

பாதுகாப்பு பணிகள், சுகாதார பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை சந்தித்துள்ளதாக பள்ளி நிர்வாகத்திற்கு புகார் வந்ததை அடுத்து தான் ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் பற்றி நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன், ஆனால் தனியுரிமை காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட மாணவர் சம்பந்தப்பட்ட குறித்த விவரங்களை என்னால் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய சமூக நல அமைப்பு ஒன்று இந்த சம்பவம் குறித்து அறிக்கையினை தயாரித்து வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்