ஆபாச இணையதளத்தில் வெளியான நிர்வாண வீடியோ! 100 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த இளம்பெண்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் தான் குளிக்கும் வீடியோ ஆபாச இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, நட்சத்திர ஓட்டல் மீது இளம்பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிகாகோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2015ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் தனது படிப்பை முடித்தார். சட்டப்பிரிவில் படித்த அவர், வழக்கறிஞர்களுக்கான தேர்வுக்காக அல்பானியில் உள்ள ஹாம்டன் இன் எனும் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.

தேர்வு முடிந்த பின்னர் ஓட்டலை காலி செய்துவிட்டு, தனது வேலையைப் பார்க்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த செப்டம்பர் மாதம் குறித்த பெண்ணிற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

அதில் இது நீங்கள் தானே என கேட்டு Link ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதனை கிளிக் செய்து பார்த்த குறித்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் நிர்வாணமாக குளிக்கும் வீடியோ அதில் இருந்தது.

அதனைத் தொடர்ந்து, மின்னஞ்சலை அனுப்பிய நபர் இளம் பெண்ணை மிரட்டத் தொடங்கியுள்ளார். அந்த வீடியோவை பரப்பாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அப்போது தான் குறித்த பெண்ணுக்கு தெரிந்துள்ளது, தான் தங்கிய ஓட்டலின் குளியல் அறையில் ரகசிய கமெரா வைக்கப்பட்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று.

மேலும் பல ஆபாச இணையதளங்களிலும் குறித்த பெண்ணின் வீடியோ வெளியானதுடன், அவரது பெயரில் போலியான மின்னஞ்சல் முகவரியும் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளதை அவர் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலின் மீது வழக்குத் தொடர்ந்துள்ள அப்பெண், தனக்கு நஷ்ட ஈடாக நூறு மில்லியன் டொலர்கள் தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அத்துடன், தன்னைப் போல பல இளம்பெண்களின் நிர்வாண வீடியோ அந்த ஓட்டலில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்