கர்ப்பிணி மனைவியா? குழந்தையா? மருத்துவர் கொடுத்த வாய்ப்பு.. கணவன் எடுத்த முடிவு! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் குழந்தை பிறந்த மறுநிமிடமே தாய் பரிதாபமாக இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃப்ரெடெரிக் கோனி என்ற நபர் தன்னுடைய வாழக்கையில் நேர்ந்த ஒரு துயரமான சம்பவத்தை தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பகிர்ந்துள்ளார்.

கர்ப்பிணியாக இருந்த என்னுடைய மனைவிக்கு திடீரென ரத்தபோக்கு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கொலராடோ மருத்துவமனையில் அனுமதித்தோம்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் எனக்கு இரு வாய்ப்புகளை கொடுத்தார். இருவரில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும். ஆபரேஷன் செய்தால், உங்களுடைய மனைவி பிழைத்துக்கொள்வார். அப்படி இல்லையென்றால் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது என கூறினார்.

அந்த கடுமையான சூழ்நிலையில் கனத்த இதயத்துடன் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தேன். குழந்தை வேண்டும் என முடிவெடுத்தால் மனைவி என்னை மன்னிக்க மாட்டாள். மனைவி வேண்டும் என முடிவெடுத்தால், அந்த பிஞ்சுக்குழந்தை என்னை மன்னிக்காது. இறுதியில், குழந்தை வேண்டும் என முடிவெடுத்தேன்.

குழந்தை பிறந்ததும், என் மனைவியிடம் காட்டிவிட்டு, வேகமாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் என்னுடைய மனைவி இறந்துவிட்டாள்.

மருத்துவர்களும் மிகுந்த சிரமப்பட்டு காப்பாற்ற போரடினார்கள். ஆனால் முடியவில்லை. பின்னர் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்தோம். அங்கிருந்தவர்கள் என்னுடைய குழந்தைக்கு இலவச தாய்ப்பாலுக்கு ஏற்பாடு செய்தனர்.

செவிலியர்கள் என்னுடைய குழந்தைக்கு தேவையான ஆடைகளை வாங்கிக்கொடுத்தனர். என்னுடைய தந்தை என்னை எப்படி வளர்த்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் என்னுடைய முழுநேரத்தையும், குழந்தைக்காக செலவிட போகிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers