இப்படி ஒரு கொடுமைய பார்த்ததில்லை.. பசியால் தன்னுடைய காலையே சாப்பிட்ட நாய்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று பசியால் தன்னுடைய காலை கடித்து சாப்பிட்ட சம்பவம் கேட்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் கரோலினா பகுதியில் இருக்கும் வீட்டில் இருந்து செல்ல பிராணிகளைப் பாதுகாக்கும் அமைப்பான நோஹ் ஆர்க்ஸ் அமைப்புக்கு போன் கால் வந்துள்ளது.

அதில், பேசிய நபர் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் வீட்டில் நாய் கட்டப்பட்ட நிலையில் பசியால் தன்னுடைய காலை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது, பார்க்கவே பாவமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இதனால் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த அந்த அமைப்பினர், காலை கடித்து திண்று கொண்டிருந்த நாயைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் அந்த நாயுக்கு தேவையான அளவு உணவு கொடுத்து அங்கிருந்து மீட்டுச் சென்று சிகிச்சையளித்தனர்.

இது குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், எங்களுக்கு கிடைத்த தகவலுக்கு பின் நாங்கள் அங்கு சென்ற போது, நாயின் பாதி காலையே காணவில்லை.

அதற்கு தண்ணீர், உணவு ஏதுமில்லை. அதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. பசி மட்டும் தான் அதன் கண்ணில் தெரிந்தது.

எலும்பு வரை கடித்திருந்ததால், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சை மூலம் தற்போது பாதிக்கப்பட்ட கால் அகற்றப்பட்டுள்ளது.

தற்போது அந்த நாய் நல்ல உடல்நலத்துடன் உள்ளது. பசியால் நாய்கள் மிகவும் குச்சி போன்று இருப்பதை பார்த்திருக்கிறோம் ஆனால், இது போன்ற சம்பவத்தை சமீப ஆண்டுகளில் பார்க்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த நாயின் உரிமையாளர்களான ஜெசிக்கா ஜேம்ஸ் மற்றும் க்ராப்ட் ஆகியொர் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்