யஜமானருக்கு புற்றுநோய் என மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்த வளர்ப்பு நாய்: வியக்க வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் தமது யஜமானருக்கு புற்றுநோய் பாதித்துள்ளதை மருத்துவருக்கு முன்னரே கண்டறிந்துள்ளது வியப்பை அளித்துள்ளது.

மனிதர்களை விடவும் அன்பும் அக்கறையும் சில நேரம் வளர்ப்பு பிராணிகளுக்கு இருக்கும். நாம் அவைகளை ஒதுக்கி நிறுத்தினாலும் அவைகளின் அன்பு எப்போதும் மாறுவதில்லை.

அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாகாணத்தில் குடியிருக்கும் 52 வயது ஸ்டெபானி என்பவரின் வளர்ப்பு நாய், மருத்துவர்களால் கண்டறிய முடியாத புற்றுநோயை யஜமானருக்கு உணர்த்தியுள்ளது.

பல நாட்களாக வயிற்றில் வலியுடன் அவதிப்பட்டு வந்துள்ளார் ஸ்டெபானி. பல முறை மருத்துவர்களை நாடியிருந்தாலும், வலி நிவாரணிகளை அளித்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்டெபானியின் வளர்ப்பு நாயான ஸைராவின் நடவடிக்கையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதை ஸ்டெபானி கவனித்துள்ளார்.

திடீரென்று ஸ்டெபானியின் வயிற்றில் முத்தமிடுவதும், ஏதோ நடக்க இருப்பது போன்று நிலை கொள்ளாமல் வீட்டின் எல்லா பக்கமும் ஓடி நடந்துள்ளது.

இதனிடையே மருத்துவர் ஒருவரின் ஆலோசனைப்படி முழுமையான பரிசோதனைக்கு ஸ்டெபானி உட்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்ட ஸ்டெபானி, குணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து குடியிருப்பில் திரும்பியுள்ளார்.

ஆனால் சில மாதங்களில் மீண்டும் அவரது வர்ப்பு நாயின் நடவடிக்கையில் மாறுதலை உணர்ந்த ஸ்டெபானி, மீண்டும் மருத்துவரை கண்டு பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

அப்போது கருப்பை புற்றுநோய் இருப்பது மீண்டும் கண்டறியப்பட்டது. தற்போது முற்றிலும் குணமடைந்து குடியிருப்புக்கு திரும்பியுள்ள ஸ்டெபானி, தமது நாய் தமது வாழ்க்கையை திருப்பித் தந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

சில வகை நாய்களுக்கு 98 விழுக்காடு துல்லியமாக புற்றுநோய் இருப்பதை கண்டறிய முடியும் என ஸ்டெபானியை பரிசோதித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் கட்டிகளில் இருந்து வெளிவரும் ஒருவகை வாசனையை நாய்கள் உணர்வதே இதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்