முதியவர் முன் முழங்காலிட்ட கிறிஸ்துமஸ் தாத்தா: வைரல் புகைப்படத்தின் நெகிழ்ச்சி பின்னணி

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் Wilmington பகுதியில் கிறிஸ்துமஸ் ஷாப்பிங்குக்காக சென்றிருந்த Gina Wilbur, அங்கு நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்த கிறிஸ்துமஸ் தாத்தா திடீரென்று எழுந்து வேகமாக நடப்பதைக் கண்டார்.

அவரை எப்படியாவது ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்று எண்ணிய Gina, தன்னை தாண்டி இன்னொரு மனிதரை நோக்கி கிறிஸ்துமஸ் தாத்தா நடப்பதைக் கண்டதும் அங்கு யார் இருக்கிறார் என்று பார்க்க, அங்கு ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.

அந்த முதியவரிடம் சென்ற கிறிஸ்துமஸ் தாத்தா, அவர் முன் முழங்காலிட்டு அவரை வாழ்த்தினார்.

Ginaவை போலவே இந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருண்ட மக்களும் ஆச்சரியமடைந்தனர்.

பின்னர்தான் தெரிந்தது, அந்த முதியவர் இரண்டாம் உலகப்போரில் நாட்டுக்காக போராடிய ராணுவ வீரர் என்று.

Bob Smiley (93) என்னும் அந்த ராணுவவீரரும் எழுந்து நின்று கிறிஸ்துமஸ் தாத்தாவின் மரியாதையை ஏற்றுக் கொண்டதோடு, அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நாட்டுக்காக செய்த கடமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் கிறிஸ்துமஸ் தாத்தா.

Bob Smileyயோ புன்னகையுடன் மிக எளிமையாக தான் தனது கடமையை மட்டுமே செய்ததாகக் கூற, அந்த அரிய காட்சியை தனது கெமராவில் பிடித்துக் கொண்டார் Gina.

பின்னர் Gina அந்த படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட, உடனடியாக வைரலான அந்த புகைப்படத்திற்கு 12,000 லைக்குகளும், 5000 ஷேர்களும் கிடைத்தன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்