கூகுளில் பிகாரி என தேடினால் இந்த பிரபலத்தின் புகைப்படம் வருவது ஏன்? சுந்தர் பிச்சைக்கு அடுத்த கேள்வி

Report Print Santhan in அமெரிக்கா

உருது மொழியில் பிகாரி எனத் தேடினால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் புகைப்படம் வருவது ஏன் என்பது குறித்து பதிலளிக்க பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்டசபை கூகுல் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை, கூகுளில் சி.இ.ஓவாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் முன்பு ஆஜாரான இவர், அங்கு எம்.பிக்கள் கேட்ட கேள்விகளுக்கு முகம் சுழிக்காமல் சுமார் 3 மணி நேரம் பதிலளித்தார்.

யார் எந்த கேள்வி கேட்டாலும், சாமர்த்தியமாகவும், தெளிவாகவும் பதில் சொன்ன சுந்தர் பிச்சையை பலரும் பாரட்டி வருகின்றனர்.

அதில் ஒன்றாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பற்றிய ஒரு கேள்வி இருந்தது. கூகுளில் இடியட் என தேடினால், டிரம்ப் புகைப்படம் வருவது ஏன் என்று கேட்கப்பட்டது.

அதற்கு சுந்தர்பிச்சையும் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பைத் தொடர்ந்து, தற்போது பாகிஸ்தானின் பிரதமராக இருக்கும் இம்ரான்கானுக்கும் இது போன்ற நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உருது மொழியில், பிகாரி எனத் தேடினால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகைப்படம் வருவதாக கூறப்படுகிறது.

உருது மொழியில் பிகாரி என்பது பிச்சைக்காரர் எனப் பொருள். இதனால், பிகாரி எனத் தேடினால் இம்ரான் கான் புகைப்படம் வருவது ஏன் என சுந்தர் பிச்சை பதிலளிக்க சம்மன் அனுப்ப வேண்டும் எனக் கூறி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்