33 மணி நேரம் உயிருக்கு போராடிய இளம்பெண்: தாயார் விடுத்த அதிரடி கோரிக்கை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் ரோஸ்மொண்ட் பகுதியில் மாயமான இளம்பெண் ஹொட்டல் சமையல் அறையின் குளிரூட்டும் அறையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் அவரது தாயார் இழப்பீட்டு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் சிகாகோ நகரின் ரோஸ்மொண்ட் பகுதியில் உள்ள கிரவுன் பிளாசா ஹொட்டலில் வார இறுதி நாட்களை கொண்டாடச் சென்ற 19 வயது Kenneka Jenkins என்ற இளம்பெண் திடீரென்று மாயமானார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிசார் 2 நாட்களுக்கு பின்னர் கிரவுன் பிளாசா ஹொட்டலின் சமையலறையில் உள்ள குளிரூட்டியில் உறைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சமையலறையில் தவறுதலாக சிக்கிய அந்த இளம்பெண் மீட்க எவரும் இன்றி சுமார் 33 மணி நேரம் உயிருக்கு போராடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஹொட்டல் நிர்வாகம் மீது வழக்குத் தொடுத்துள்ள Kenneka Jenkins-ன் தாயார் 50 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டுள்ளார்.

தமது மகளின் மரணத்தை ஹொட்டல் நிர்வாகத்தினரால் தவிர்த்திருக்க முடியும் என கூறியுள்ள அவரது தாயார், நிர்வாகிகளின் மெத்தனமே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சம்பவத்தன்று பார்ட்டியின் நடுவே வெளியேறிய Kenneka Jenkins அதன் பின்னர் திரும்பவே இல்லை.

அதிகாலை 4 மணியளவில் அவரது நண்பர்கள் குடியிருப்புக்கு திரும்பும் நிலையில், Kenneka Jenkins-ன் கார் மட்டும் வெளியே நின்றுள்ளதை கண்டுள்ளனர்.

உடனே நண்பர்கள் Kenneka Jenkins-ன் தாயாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக ஹொட்டலுக்கு விரைந்த அவர் நிர்வாகத்திடம் சோதனைக்கு கோரியுள்ளார்.

ஆனால் ஹொட்டல் நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி பொலிசாருக்கு தகவல் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

இருப்பினும் தமது மகள் மாயமானதற்கு ஹொட்டல் நிர்வாகமே காரணம் என கூறும் தாயார், உரிய நேரத்தில் ஹொட்டல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் தமது மகளை உயிருடன் மீட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்