ஆசை மகளை பிரிய முடியாமல் தந்தை செய்த நெகிழ்ச்சி காரியம்! வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மகள் பணிபுரியும் விமானத்தில் பயணம் செய்து தந்தை ஒருவர் ஆச்சரியம் அளித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் ஒஹையோவைச் சேர்ந்த இளம்பெண் பியர்ஸ் வாகன். விமான பணியாளரான இவருக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுமுறை கிடைக்கவில்லை.

பணிக்கு சென்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், தன் தந்தை ஹால் வாகனுடன் கிறிஸ்துமஸை செலவிட முடியாது என்று நினைத்து வருந்தியுள்ளார். இந்நிலையில், இவரின் தந்தை ஹால் மகளுக்கு ஆச்சரியம் அளிக்கும் காரியம் ஒன்றை செய்தார்.

அதாவது, கிறிஸ்துமஸ் தினம் மற்றும் அதற்கு அடுத்த நாள் தன் மகள் எந்தெந்த விமானங்களில் எல்லாம் பணியாற்றுகிறாரோ, அவற்றில் எல்லாம் ஹால் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். அதன்படி 3 நாட்களில் 6 விமானங்களில் பியர்ஸுடனே ஏறி, இறங்கி கிறிஸ்துமஸை கொண்டாடினார். இதனால் பியர்ஸ் மகிழ்ச்சியில் திளைத்தார்.

இந்நிலையில், ஹாலுடன் பயணித்த மைக் லெவி என்பவர் இந்த விடயத்தை அறிந்து வியப்படைந்தார். மேலும் அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து, இச்சம்பவத்தையும் கூறி பேஸ்புக்கில் பகிர்ந்தார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்