11 வயது சிறுவனின் உயிரை பறித்த மீன்! எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் பாட்டி சமைத்த மீனின் வாசனை ஒத்துக் கொள்ளாத்ததால், 11 வயது சிறுவன் ஒவ்வாமை ஏற்பட்டு பரிதாபமாக இறந்துள்ளான்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் Brooklyn பகுதியைச் சேர்ந்த சிறுவன் Jean-Pierre.

11 வயது சிறுவனான இவன் கடந்த செவ்வாய் கிழமை ஒவ்வாமை காரணமாக மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான். சிறுவன் உயிரிழந்ததற்கு ஒவ்வாமை பிரச்சனை தான் என்று கூறப்பட்டது.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அவர்கள் Jean-Pierre குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவர்கள் வீட்டில் பாட்டி மீன் உணவு சமைத்துள்ளார். அப்போது அதிலிருந்து வந்த வாசனையால், சிறுவனுக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால் அது என்ன வகை மீன்? என்பது குறித்து பொலிசார் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவில் இருக்கும் எட்டு உணவுகளில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுவதாகவும், அதில் இதுவும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது விரைவில் தெரிவிக்கப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers